News
எரிபொருள் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்!
எரிபொருள் விலை திருத்தம் இன்று (30) அறிவிக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி நள்ளிரவில் எரிபொருள் விலையில் இறுதியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது,
அதனை தொடர்ந்து குறித்த விலைகள் நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.
அதன்போது, 95 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகள் மாத்திரமே 06 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில், அடுத்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று பிற்பகல் அறிவிக்கப்படவுள்ளது.