News

தேர்தல் செலவு அறிக்கை குறித்து வௌியான அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களின் ஊடாக தங்களது வருமானச் செலவு அறிக்கையை எதிர்வரும் 6ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அறிக்கைகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு குறித்த தினத்தின் நள்ளிரவு 12.00 மணிக்குள் வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் தமது வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை தேர்தல் செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் சாதாரண வேலை நாட்களில் மாலை 6.00 மணி வரையும், 6-ந்தேதி நள்ளிரவு 12.00 மணி வரையும், வேட்பாளர்களும், வேட்பாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்களும் தேர்தல் வருமானத்தை ஒப்படைக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் வருமான செலவின அறிக்கைகளை ஏற்கும் சிறப்புப் பிரிவுகள் செயல்படும். சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கான செலவின அறிக்கைகள் இடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களிடம் தேர்தல் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை கையளிப்பதற்காக விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை பெறுவதற்கான விசேட பிரிவுகள் சாதாரண வேலை நாட்களில் மாலை 6.00 மணி வரையும், 6ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரையும் திறந்திருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ உரிய அறிக்கைகளை ஒப்படைக்காமல் இருப்பது தேர்தல் நடைமுறைகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button