அமைச்சரவை தீர்மானங்கள்
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
அஸ்வெசும குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொள்ள ஒரு குழந்தைக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை.
அஸ்வெசும பெறாத (தேர்ந்தெடுக்கப்பட்ட) குடும்பங்களின் குழந்தைகளுக்கும் இது வழங்கப்பட உள்ளது.
—
அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, சில இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டு, 2024 டிசம்பர் 20 வரை அரிசி இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
—
அஸ்வெசும நன்மைகளின் காலத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
ஏழைப் பிரிவினருக்கு வழங்கப்படும் அஸ்வெசும 10,000 ரூபாவாக உயர்த்தப்படும்.
மிகவும் ஏழ்மையான பிரிவினரின் அஸ்வெசும 17,500 ரூபாவாக உயர்த்தப்படும்.
—
அரசு நிறுவனங்களுக்கு பெரும் செலவுச் சுமையாக இருக்கும் உயர்தர சொகுசு வாகனங்களை அப்புறப்படுத்தும் திட்டம்.
—
அரச சேவையில் முறையற்ற முறையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர தீர்வு காண 2 குழுக்களை நியமிப்பதற்கு அனுமதி.
—
அரசு வைத்தியசாலைகள் மற்றும் கிளினிக்குகளில் உள்ள மருந்துப் பற்றாக்குறையைப் போக்க உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு அதிக வாய்ப்பு.
—
நிலவிய சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேலைத்திட்டம்.
—
2025 சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்விற்கான ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்காக வழிகாட்டுவதற்கு 17 பேர் கொண்ட அமைச்சர்கள் அடங்கிய துணைக் குழுவை நியமிப்பதற்கு அனுமதி.