News

மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரம்: ஜனாதிபதி அநுர விடுத்த அதிரடி பணிப்புரை

மறு அறிவித்தல் வரை எந்தவொரு அனுமதிப்பத்திரத்தையும் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மதுவரி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake), ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்களின் பட்டியலை நேற்று (04) வெளியிட்டிருந்தார்.

அந்த காலப்பகுதியில் 361 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 172 பேர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அரசியல் லஞ்சமாக வழங்கப்பட்டவை எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

இதேவேளை, மாதாந்த நிலுவைத் தொகையான 5.7 பில்லியன் ரூபாவை செலுத்தத் தவறியதன் காரணமாக, டபிள்யூ. எம். மெண்டிஸ் மற்றும் நிறுவனத்தின் மதுபான உரிமத்தை இன்று முதல் இடைநிறுத்துவதற்கு மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மேலும், நிலுவைத் தொகை மற்றும் வரியை மேலும் செலுத்தாவிட்டால், அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து மதுபான உரிமங்களும் இம்மாதம் 31ஆம் திகதி பிறகு நீட்டிக்கப்படாது என்றும் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

அத்தோடு, குறித்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமங்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி மென்டிஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நிராகரிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்து.

இவ்வாறானதொரு பின்னணியில், மறு அறிவித்தல் வரை எந்தவொரு அனுமதிப்பத்திரத்தையும் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி மதுவரி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button