News

வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் நிதியில் முறைகேடு!

தேர்தல் நடவடிக்கைகாக வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பவற்றின் செலவீனத்திற்காக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களப் பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் நேற்று (09.12.2024) வரை 338 பேர் தமது தேர்தல் செலவு அறிக்கையை சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சில தரப்புக்கள் பதிவுத் தபாலில் அவற்றை அனுப்பியுள்ளதால் கிடைக்கப் பெறுவதில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தங்களது தேர்தல் செலவு அறிக்கையை கடந்த 6ஆம் திகதி நள்ளிரவுக்கிடையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

அந்தவகையில், வன்னி தேர்தல் மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகள் மற்றும் 20 சுயேட்சை குழுக்களை சேர்ந்தவர்கள் உட்பட 338 பேர் தமது தேர்தல் செலவு அறிக்கையை சமர்பித்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button