News
வீதிகளில் வசிப்பவர்களைக் கணக்கிடும் பணியில் அரச அதிகாரிகள்
குடியிருக்க வீடுகள் இன்றி வீதிகளில் வசிப்பவர்களைக் கணக்கிடும் பணியொன்று நேற்றிரவு (18) எட்டு மணி தொடக்கம் நள்ளிரவு வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் மேற்கொண்டு வரும் சனத்தொகைக் கணக்கெடுப்பின் ஒரு கட்டமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குடியிருப்பதற்கு வீடுகள் இல்லாதவர்கள் மற்றும் வீதிகளில் வசிப்பவர்கள் இந்தக் கணக்கெடுப்பில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதற்காக சுமார் 35 ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் ஈடுபடுத்தப்பட்டதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (19) தொடக்கம் சனத்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான தரவுகளை சரிபார்க்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.