News
அதிபர் வெற்றிடங்களை நிரப்புவது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
தேசிய பாடசாலைகளில் நிலவும் முதலாம் (1) தரப்படுத்தப்பட்ட அதிபர் பதவி வெற்றிடங்களுக்கு புதியவர்களை தெரிவு செய்வதற்காக விண்ணப்பங்களை கோருவது தொடர்பில் கல்வி அமைச்சினால் (Sri Lankan Ministry of Education) அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் பிற தேவையான ஆவணங்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் கடந்த 11ஆம் திகதி வெளியிடப்பட்டது.
மேலும், அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 31க்கு முன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, அதற்கான அறிவிப்பு, பாடசாலை ஆவணங்கள், மதிப்பெண் நடைமுறை மற்றும் மாதிரி விண்ணப்பம் ஆகியவற்றை அமைச்சின் இணையதளத்தில் ‘சிறப்பு அறிவிப்புகள்’ கீழ் பதிவிறக்கம் செய்யலாம்.