News

பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

நாடு முழுவதும் பல பிரதேசங்களில் பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகளை வேறு இடத்திற்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க(Thushari Jayasinghe) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

”குரங்குகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் ஆரம்ப நடவடிக்கைகைள் ரந்தெனிகல மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கங்களை அண்டிய பிரதேசங்களில் முதலில் முன்னெடுக்கப்படும்.

இதன் பிரதான நோக்கம் விலங்குகளிடம் இருந்து பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதாகவும்.

அத்தோடு பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளிடம் இருந்து மக்களை பாதுக்காக்க வேண்டும்.

மேலும், நோய் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ளும்.

இதற்கமைய இந்த திட்டம் எதிர்காலத்தில் எனைய பகுதிகளிலும் ஆரம்பிக்கப்படும்.” எனறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button