News

ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வகைகூறுதலை உறுதி செய்வதற்காக அமைச்சுக்களில் விசாரணை அலகுகளை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு…

16. அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வகைகூறுதலை உறுதி செய்வதற்காக அமைச்சுக்களில் விசாரணை அலகுகளை நிறுவுதல்.

தற்போது அரச சேவை தொடர்பில் நாளாந்தம் அதிகளவு முறைப்பாடுகள் பெயர் குறிப்பிட்டும், அநாமதேயமாகவும் ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் கிடைத்து வருகின்றது. அரசு மீது மக்கள் வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கும், குறிப்பாக அரச சேவையில் எதிர்பார்க்கப்படும் சாதகமான மாற்றங்களை மேற்கொள்வதற்காக அவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பாக பக்கச்சார்பற்ற வகையிலும் மற்றும் விஞ்ஞான ரீதியாகவும் விடயங்களை விசாரணை செய்ய வேண்டியுள்ளது.

அதற்கமைய, முன்னைய அரசுகளின் கீழ் அரச நிறுவனங்கள் செயற்பட்டுள்ள விதம் தொடர்பிலும், தற்போது அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் முன்வைக்கப்படும் பொது மக்களின் முறைப்பாடுகள், விளக்களித்தல் மற்றும் பல்வேறு மூலங்களிலிருந்து தெரியவரும் தகவல்கள் தொடர்பான விடயங்களை விசாரணை செய்வதற்காக அமைச்சு மட்டத்தில் நாடு தழுவிய சேவையில் முதலாம் தர அலுவலர் அல்லது புலனாய்வுச் செயன்முறை தொடர்பான அனுபவமுள்ள அரச சேவையின் முதலாம் தர நிறைவேற்று அதிகாரியின் தலைமையில் விசாரணைப் அலகை நிறுவுவதற்காக  ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button