News
சீனாவில் பரவும் வைரஸ் தொடர்பில் இலங்கை அவதானம்
சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பிறகு சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Human metapneumovirus (HMPV) (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக இருப்பதாகவும், அவர்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் வௌியாகியுள்ளன.
இது தொடர்பான தகவல்களை இன்று (03) அறிந்து கொண்டதாகவும், அதற்கான ஆய்வின் பின்னர் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கவுள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.