News

பிரித்தானியாவில் வேலை இழக்கப்போகும் இலட்சக்கணக்கானோர்

பிரித்தானியாவில் இந்த ஆண்டு சுமார் 200,000 பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனுடன், உற்பத்தி விலை அதிகரிப்பு மற்றும் தொழில்களுக்கு பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் உருவாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு, சில்லறை வர்த்தகர்களுக்கு 2025 மோசமான நிதி ஆண்டாக இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.

பிரித்தானியாவில் பதவியேற்றுள்ள லேபர் அரசின் கொள்கைகள், தொழில்கள் மீது குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தை ஏற்படுத்த இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய சேன்சலரான Rachel Reeves அறிமுகம் செய்துள்ள தொழில்கள் தொடர்பான கட்டுப்பாடுகளால் இந்த ஆண்டில் 202,000 பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக குறித்த ஆய்வுகள் எச்சரிகின்றன குறைந்த ஊதியம், குறைவான பணியாளர்கள், உயர் நுகர்வோர் விலைகள் என பணியாளர்கள் மீது லேபர் அரசின் பட்ஜெட் கடும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பிரபல சில்லறை தொழில்கள் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் 2022ஆம் ஆண்டில், கோவிட் ஏற்படுத்திய பிரச்சினைகளைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக 345,000 தொழில்கள் தங்கள் கதவுகளை மூடும் நிலை ஏற்பட்டிருந்தது.

தற்போது அதே போன்றதொரு நிலைமை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக அந்நாட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button