News

உலகில் விசா பெற எளிதான நாடுகளின் தரவரிசையில் இலங்கை

உலகில் விசா பெற எளிதான நாடுகளின் தரவரிசையில்  இலங்கை முதன்மை இடங்களை பெற்றுள்ளதாக Brand Finance நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, உலகில் விசா பெறும் இலகுவான நாடுகளில் இலங்கை 33ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த தரவரிசையின்படி, தெற்காசியப் பிராந்தியத்தின் முக்கிய இடங்களுள் ஒன்றாக கொழும்பு தனித்துவ இடத்தைப் பெற்றுள்ளதாக அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய Brand Finance Global City Index இல் கொழும்பு 84வது இடத்தைப் பெற்றுள்ளது. எனினும் கடந்த வருடம் கொழும்பு 78 ஆவது இடத்தில் இருந்தது.

இதேவேளை, சுகாதார சேவைகள் அடிப்படையில் கொழும்பு 74வது இடத்தைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது கொழும்பு மாநகரம் சுகாதாரத் துறையில் 10 இடங்களுக்கு முன்னேறியிருந்தமை விசேட அம்சமாகும்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் வைத்தியசாலை அமைப்பும் நவீன வசதிகளும் இதற்குக் காரணம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button