News
பேருந்து நடத்துநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய தடை
எதிர்வரும் காலங்களில் பேருந்து பயணத்தின் போது நடத்துநர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார்.
அத்துடன், இனிவரும் காலங்களில் மிதிபலகையில் பயணிக்கும் நடத்துநர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து பயணத்தை முன்னெடுப்பதில் காணப்படும் போட்டித்தன்மை காரணமாக சில நடத்துநர்கள் அவதானமின்றி மிதிபலகையில் பயணிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார்.