பங்குச் சந்தையில் EPF க்கு பல பில்லியன் ரூபாய் இலாபம்
கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) செய்த முதலீடுகளின் சந்தை மதிப்பு 2024 செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு 109.69 பில்லியன் ரூபாவாக உள்ளதாக நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம், பங்குச் சந்தையில் நிதியத்தால் செய்யப்பட்ட முதலீடுகளின் மொத்த கொள்முதல் செலவு 88.67 ரூபாவாகும், மேலும் பங்குச் சந்தையில் முதலீடுகளிலிருந்து ஊழியர் சேமலாப நிதியம் ஈட்டிய மொத்த இலாபம் 21.01 பில்லியன் ரூபாவாகும்.
2024 ஜூன் 30 ஆம் திகதிக்கு, கொழும்பு பங்குச் சந்தையில் ஊழியர் சேமலாப நிதியம் செய்த முதலீடுகளின் சந்தை மதிப்பு 110.03 பில்லியன் ரூபாவாகும்.
தற்போது, ஊழியர் சேமலாப நிதியம் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 66 ஆகும்.
2024 ஜூன் 30ஆம் திகதிக்கு அந்த எண்ணிக்கை 67 ஆக இருந்த நிலையில், கடந்த காலாண்டில் சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸில் உள்ள அதன் முதலீடுகளை முழுமையாக வெளியேற்ற நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.