சீனாவில் பரவும் HMPV வைரஸ்: அண்டை நாடுகளில் அதிகரித்துள்ள பாதிப்பு!
சீனாவிலிருந்து தற்போது பரவி வரும் HMPV வைரஸால் பல நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது சீனாவின் அண்டை நாடுகளான இந்தியாவும்(India) மலேசியாவும்(Malaysia) இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாநிலமான கர்நாடகா, இதற்கு துரித நடவடிக்கை எடுத்துள்ளது. ‘HMPV’ அறிகுறிகள் தென்பட்டால், பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், கூட்ட நெரிசலான பகுதிகளில் முகக் கவசங்களை அணியவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது கோவிட் வைரஸ் போன்று அபாயகரமானது அல்ல என்று நிபுணர்கள் கூறினாலும், பிரித்தானியாவில் இந்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வைரஸ் முதன்முதலில் 2001ஆம் ஆண்டு நெதர்லாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது உலகளவில் ஒரு பொதுவான நோயாகும். சளி, இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அடிப்படை அறிகுறிகளுடன் காணப்படலாம்.
ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் நோயெதிர்ப்பு நிலையைப் பொறுத்து, தீவிரமடையலாம் என்றும், மரணம் ஏற்படவும் காரணமாகலாம் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களை ஒப்பிடுகையில், பாதிப்பு எண்ணிக்கை 4.15 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகின்றது.