News
இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானத்தில் பாரிய அதிகரிப்பு
இலங்கையின் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் கடந்த (2024) ஆண்டில் 53.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) குறிப்பிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில், 1,487,303 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், இதனூடாக பதிவு செய்த மொத்த வருமானம் 2,068 மில்லியன் டொலர்கள் ஆகும்.
2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,053,465 ஆக பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், இதனூடாக இலங்கை 3,168.6 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இது ஆண்டு அடிப்படையில் 53.2% வளர்ச்சியாகும்.
2024 டிசம்பரில் சுற்றுலாத்துறை வருமானம் 362.1 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.
2023 டிசம்பரில் இதன் மதிப்பு 269.3 மில்லியன் டொலர்களாக பதிவானதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.