News
அஸ்வெசும பயனாளார்களுக்கு மகிழ்ச்சி தகவல் : கிடைத்தது அனுமதி
அஸ்வெசும பயனாளர்களுக்காக வழங்கப்படும் நிதியை அதிகரிப்பது தொடர்பான யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, வறிய குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்படும் 15,000 ரூபாய் கொடுப்பனவு 17,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 8,500 ரூபாய் வழங்கப்படும் குடும்பம் ஒன்றுக்கான கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
2,500 ரூபாய் வழங்கப்படும் குடும்பம் ஒன்றுக்காக 5000 ரூபாவை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 5,000 ரூபாய் வழங்கப்படும் குடும்பங்களுக்கான கொடுப்பனவு மாற்றமின்றி வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.