News

பெற்றோர் அவதானம்…! சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டிலுள்ள குழந்தைகளிடையே நீரிழிவு நோய் உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் என்பன தற்போது அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை ஜெயவர்தனபுர மருத்துவ பீடத்தின் குழந்தை மருத்துவத் துறையின் பேராசிரியர் ருவந்தி பெரேரா (Ruanthi Perera) தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், குழந்தைகள் ஆரோக்கியமான உணவைப் பின்பற்ற ஊக்குவிப்பது அவசியம் என்றும் பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குழந்தைகளிடையே மனநிலை தொடர்பான நோய்களும் தொடர்ந்து பதிவாகி வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கிடையில், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, யுனிசெஃப், கல்வி அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு ஆகியவை இணைந்து பாடசாலை மாணவர்களிடையே அறிவு திறன் சம்பந்தமான போட்டியை ஏற்பாடு செய்துள்ளன.

இப்போட்டியின் இறுதிச் சுற்று 25 ஆம் திகதி கொழும்பில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button