News

74 தேசியப்பட்டியல் வேட்பாளர்களுக்கு ஏற்படப்போகும் சிக்கல்

தேர்தல் செலவறிக்கையை சமர்ப்பிக்க தவறிய தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் தேர்தல் செலவறிக்கையை சமர்ப்பிக்காத 74 தேசியப்பட்டியல் வேட்பாளர்களுக்கே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன், தேர்தலில் போட்டியிட்டுத் தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 800 வேட்பாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பான நடவடிக்கைகள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெற்ற நிலையில் டிசம்பர் 6ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த அறிக்கைகளை வழங்காத வேட்பாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டால், அந்த வேட்பாளர் மாகாண சபை அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்பாளராகத் தோற்ற முடியாது என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button