News
கடவுச்சீட்டு பெறுவது தொடர்பில் வௌியான அறிவிப்பு
வௌிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்கு இணையவழி முறைமையில் ஒரு திகதியை முன்பதிவு செய்யலாம் என்றும், குறித்த திகதியில் ஒருநாள் கடவுச்சீட்டைப் பெற முடியும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வௌியிட்ட அமைச்சர், இன்றைய தினம் யாரேனும் ஒருவர் திகதியொன்றை முன்பதிவு செய்தால், அவர்களுக்கு ஜூன் 27 ஆம் திகதி கிடைக்கும்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாய்மொழி மூலமாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இன்று (23) பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார்.