News

அமைச்சர்களுக்கான சலுகைகளில் மாற்றம் இல்​லை!

முன்னைய அரசாங்கங்களின் பதவிக் காலத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடர்ந்தும் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கான வாகனங்கள், கொடுப்பனவுகள் மற்றும் பணியாளர்கள் தொட​ர்பான வரையறைகளை குறிப்பிட்டு ஜனாதிபதி செயலகம் சுற்றறிக்கை ஒன்​றை விடுத்துள்ளது.

அதன் பிரகாரம் அமைச்சர் மற்றும் பிரதிய​மைச்சர்களுக்கான இரண்டு வாகனங்கள், நிலையான மற்றும் மொபைல் போன் கொடுப்பனவுகள், அலுவலகக் கொடுப்பனவுகள், ஒருங்கிணைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட 15 பணியாளர்கள் உள்ளிட்ட சலுகைகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிய​மைச்சர்களுக்கு மட்டும் பணியாளர் எண்ணிக்​கை 12 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றபடி முன்​னைய அரசாங்க காலங்களில் வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்தும் வழங்கப்படுவதை குறித்த சுற்றறிக்கை உறுதி செய்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button