News

புலமைப் பரிசில் பெறுபேறுகள் – பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை (Grade 5 Scholarship Exam) பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் (Examination Department) கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரை இதற்கான காலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சை பெறுபேறுகள் நேற்று (23) வெளியாகிய நிலையில் அதற்கமைய, குறித்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புலமைப் பரிசிலை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க கூடியவர்கள் 20,000 பேர் என்பதுடன், விசேட தேவையுடைய 250 விண்ணப்பதாரிகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

அத்துடன் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் என்பவற்றைக் கொண்டு, பாடசாலை பரீட்சை பெறுபேறு ஆவணத்தை தரவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரங்களையும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வருடம் இடம்பெற்ற குறித்த புலமைப் பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் கசிந்து சமூகத்தில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button