அடுத்த 24 மணித்தியாலத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (26) பிற்பகல் வெளியிடப்பட்ட இந்த ஆலோசனையானது அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு திங்கட்கிழமை (27) பிற்பகல் 01.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக மன்னார் மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் கடற்படை மற்றும் கடற்தொழிலாளர் சமூகங்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.