News

குறைக்கப்படவுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை

நாட்டின் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை லங்கா சதோச நிறுவனம் (Lanka Sathosa Company) தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியின் விலை ரூபா 208 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நாட்டரிசியின் விலை குறைக்கப்பட்டுள்ள விலை ரூபா 219 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக பொருட்களின் விலைகள் குறைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்தோடு, இந்த ஆண்டு (2025) ஜனவரி மாத இறுதி வாரத்தில், 2024 ஜனவரி மாத இறுதி வாரத்துடன் ஒப்பிடும்போது, ​​ஒரு தேங்காயின் சில்லறை விலை 88 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button