News
முட்டை – கோழி இறைச்சி விலைக்குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

சில்லறை சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு முட்டையின் விலை 30 ரூபாய்க்கும் குறைவடைநதுள்ளதாக கோழிப்பண்ணை சம்பந்தமான உற்பத்தி வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, பல்பொருள் அங்காடி சந்தைகளில் ஒரு கிலோ கோழியின் விலை 750 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை உள்ளது.
அத்துடன், ஏனைய சில்லறை விற்பனை நிலையங்களில் கோழி இறைச்சி 900 ரூபாயாகக் குறைந்துள்ளதாகவும், தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி 1,000 ரூபாய் முதல் 1,100 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கோழி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.