News
அதிகரிக்கவுள்ள வெப்பம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.
திணைக்களத்தினால் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது அதிகாலை வேளையில் நிலவும் குளிரான காலநிலையும் தொடரக்கூடுமென அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே சிறியளவில் மழை வீழ்ச்சி பதிவாகினாலும், வெப்பமான காலநிலை தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
மழை பெய்வதற்கு ஏற்ற அளவிலான திறன் கொண்ட மேகங்களின் உருவாக்கம் குறைவாகக் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.