News

இலங்கை மக்களுக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண அநுர அரசு புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுற்றாடல் பாதுகாப்பிற்காக மக்களின் பங்களிப்பைப் பெறும் நோக்கில் இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு (Ministry of Environment) தெரிவித்துள்ளது.

இந்த செயல்முறை நேற்று(14) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 076 6412029 என்ற வட்ஸ்அப் எண்ணுக்கு சுற்றுச்சூழல் பிரச்னைகளை குறுஞ்செய்தியாக அனுப்பலாம்.

சுற்றுச்சூழல் அமைச்சகம் அந்தப் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி, விரைவான மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறிவதற்கான தொடர் செயல்முறை மூலம் விசாரணை செய்யும்.

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை, இந்த வட்ஸ்அப் எண்ணில் பிரச்சினைகளை சமர்ப்பிக்கலாம்.

இதேவேளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடு செல்வதற்கு வங்கி கணக்கில் பெருந்தொகை பணம் வங்கி கணக்கில் இருப்பில் இருக்க வேண்டும் என கூறி , வங்கி கணக்கு இலக்கங்களை பெற்று , அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று , வங்கியில் உள்ள பணத்தினை மோசடியாக கும்பல் பெற்றுக்கொண்டு தலைமறைவாகி வருகிறது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கபெற்றள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button