நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தின் முதல் 13 நாட்களில் 115,043 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி மாதம் 01ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 367,804 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 59,391 ஆகும்.
அதன்படி, ரஷ்யாவிலிருந்து 48,411 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 34,655 சுற்றுலாப் பயணிகளும்,ஜெர்மனியிலிருந்து 23,280 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 22,670 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
மேலும், பிரான்ஸிலிருந்து 20,078 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 13,799 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.