News
கர்ப்பிணித்தாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்ட பெருந்தொகை

இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்துக்காக 7,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று(17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் போஷாக்குக்கான திரிபோஷா திட்டத்துக்கு இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.