News
அரச தொழிலுக்கு காத்திருப்போருக்கு ஜனாதிபதி வெளியிட்ட நற்செய்தி

இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் சிரேஷ்ட பிரஜைகளுக்காக சிறப்பு வட்டி திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி அநுர, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்கள் என்று கூறினார்.
அவர்களின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, ஒரு வருட நிலையான வைப்புத்தொகையான ரூ.1 மில்லியன்களுக்கு, தற்போதைய சந்தை வட்டி விகிதத்தை விட 3 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த முன்மொழிவை செயல்படுத்த மூத்த குடிமக்கள் செலுத்த வேண்டிய 3% வட்டிக்கு தேவையான ஏற்பாடுகளுக்காக 15,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என்றும், இது 2025 ஜூலை முதல் நடைமுறைபடுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.