இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (20) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292.72 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 301.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 366.92 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 380.91 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303.45 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 315.95 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 204.31 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 213.09 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 184.02 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 193.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.