News
அதிகரிக்கும் வெப்பம் : மக்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!

வெப்பநிலையானது இன்றையதினமும் மனித உடலால் உணரப்படும் அளவை விட அதிகரிக்ககூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.
திணைக்களத்தினால் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இந்த நிலைமை காணப்படும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
நிலவும் வெப்பமான காலநிலையினால் பணியிடங்களில் உள்ளவர்கள் அதிகளவான நீரைப் பருக வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, வீட்டில் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.