News
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் செயற்பாடு தொடர்பான அறிவிப்பு!
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பிரதியமைச்சர் ருவன் கொடித்துவக்கு இதனை தெரிவித்துள்ளார்.
இதனிடையே கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் 26 ஆம் திகதியளவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், குறித்த முனையத்திற்கு கொள்கலன்களை ஏற்றிய கப்பலொன்று வருகை தரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.