News
நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாடு: முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளைப் பயிரிடும் திட்டத்தைத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் தேங்காய் பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஆரம்ப நிகழ்ச்சி கடந்த 17 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது .
அதன்படி, வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் சுமார் ஒரு மில்லியன் தென்னங்கன்றுகளை நடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், தேங்காய் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், தெங்கு பயிர்ச் செய்கையை வலுவூட்டும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.