News

அமெரிக்க பொருட்கள் மீதான வரி : ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் (United States) வரி விதிப்புக்குப் பதிலடியாக ஐரோப்பிய ஒன்றியமும் (European Union) விரைவில் அமெரிக்கப் பொருள்களுக்கு வரி விதிப்பை அறிவிக்க அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில், யூரோவுக்கு ($28.33 பில்லியன்) மேலான வரியை விதிக்கப்போவதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.

எஃகு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட அமெரிக்கப் பொருள்களுக்கான புதிய வரி அடுத்த மாதத்திலிருந்து தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதலாம் திகதி அமெரிக்கப் பொருள்கள் மீதான தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வரி முடிவுக்கு வருவதாகவும் ஏப்ரல் நடுப்பகுதிக்குள் அமெரிக்கப் பொருள்கள் மீதான புதிய வரித் தொகுப்பு முன்வைக்கப்படும் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வோன் டெர் லேயன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “புதிய வரி விதிப்பானது அமெரிக்க வரி விதிப்புக்கு இணையாக இருக்கும்.

இரண்டு அடுக்குகளில் எங்களுடைய பதில் நடவடிக்கை இடம்பெறும் அத்தோடு ஏப்ரல் முதலாம் திகதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் திகதிக்குள் முழுமையாக வரி விதிப்பு இடம்பெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button