படலந்த அறிக்கை – ரணில் வெளியிடப்போகும் விசேட அறிவிப்பு

படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அதன்படி, நாளை ரணில் விக்ரமசிங்கவின் குறித்த அறிக்கை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படலந்த ஆணைக்குழு அறிக்கை அறிக்கையை சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்.
அதன்போது, இந்த அறிக்கை தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, படலந்த ஆணைக்குழு அறிக்கையை கையாள்வது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை, கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் பிமல் தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், அறிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளை முன்மொழிய ஒரு சிறப்பு குழுவை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.