News

இலங்கையில் காற்று மாசு குறித்து வெளியான செய்தி

2024 ஆம் ஆண்டின் உலகின் மிகவும் காற்று மாசுபட்ட நகரங்களின் முதல் 50 பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை. 51ஆவது இடத்தில் உள்ளது என்று சுவிஸ் காற்று தர கண்காணிப்பு நிறுவனமான IQAir தெரிவித்துள்ளது.

இலங்கையின் காற்றின் தரம் மோசமடைந்து வருவதாக பல மாதங்களாக ஊடகங்களில் வெளியான தொடர் செய்திகளுக்குப் பிறகு, இந்த தகவல் வெளியாகியுள்ளது.

IQAir அறிக்கையின் படி, சிறிய, ஆபத்தான காற்றில் பரவும் துகள்களின் சராசரி செறிவு PM2.5 ஆகும். இது சுவாசத்தில் உள்ளிழுக்கப்படும் போது குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது, மேலும் நுரையீரலுக்குள் ஆழமாகச் செல்லும் வாய்ப்பும் உள்ளது.

இந்த நிலையில்,, உலக சுகாதார அமைப்பு, 5 mg/cu m க்கும் அதிகமான அளவுகளை, சிறப்பான நிலைக்கு பரிந்துரைக்கிறது, எனினும், இது ஒரு சில நாடுகளால் மட்டுமே பூர்த்தி செய்யப்படும் தரநிலையாக உள்ளது.

24 மணி நேர சராசரி வெளிப்பாடுகள் வருடத்திற்கு 3 – 4 நாட்களுக்கு மேல் 15 µg/m3 ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது என்று WHO என்ற உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம் மற்றும் மொனராகலை மாவட்டங்கள் ஆரோக்கியமற்ற காற்றின் தர அளவைப் பதிவு செய்திருந்த போதிலும், நாட்டின் பிற பகுதிகள் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில், கடந்த டிசம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை, நாட்டின் காற்றின் தரம் கடுமையான அளவை எட்டியிருந்தது அண்டை நாடுகளின் காற்று தெற்கே நாட்டிற்கு நகர்ந்ததே ஆகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button