News
தொடர் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் அஞ்சல் திணைக்களம்

தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 விடயங்களை முன்வைத்து பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி ஆகியன அறிவித்துள்ளன.
இன்று (16) மாலை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
தபால் திணைக்களத்தில் சுமார் 7,500 ஊழியர்களின் பற்றாக்குறை காணப்படுவதாகவும், இதற்கு தீர்வைக் கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.