News
நவீன டிஜிட்டல் கட்டண முறைகள்: இலங்கை மத்திய வங்கியின் புதிய திட்டம்

நவீன டிஜிட்டல் கட்டண முறைகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி டிஜிட்டல் பணம் செலுத்துதல் குறித்த விழிப்புணர்வு திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு திட்டத்தை இலங்கை மத்திய வங்கி ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தலைமையில் இந்த செயற்திட்டம் இடம்பெறவுள்ளது.
நாளையும், நாளை மறுதினமும் நுவரெலியா கிரகரி வாவி வாகன தரிப்பிடத்தில் இந்த செயற்திட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில், வங்கித்துறை, நிதித்துறை, தொலைத்தொடர்பு சேவைகள் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.