News

பூமியை கடக்கவுள்ள பாரிய விண்கல்: நாசா விடுத்துள்ள எச்சரிக்கை

பூமியை நோக்கி மிகப்பெரிய விண்கல்லொன்று சுமார் 77000 கிமீ வேகத்தில் வந்து கொண்டு இருப்பதாக நாசா (NASA) அறிவித்துள்ளது.

2014 TN17 என அழைக்கப்படும் குறித்த விண்கல் சுமார் 165 மீட்டர் அளவுடையதாகும்.

இந்த விண்கல் எதிர்வரும் 26 ஆம் திகதி பூமியை 5 மில்லியன் கிமீ தொலைவில் கடந்து செல்லும் என நாசா குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தற்போதைக்கு குறித்த விண்கல்லினால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாசா இதை “Potentially Hazardous Asteroid” (PHA) என வகைப்படுத்தியுள்ளது.

இதன் பாதை வேறு கிரகங்களின் ஈர்ப்புவிசை அல்லது விண்வெளித் தடங்கலால் மாற்றப்பட்டால், எதிர்காலத்தில் பூமியை தாக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த விண்கல் தொடர்பில் நாசா தெரிவிக்கையில், “2014 TN17 என்பது அபொல்லோ விண்கல் குழுவில் (Apollo NEO)சேரும். இது பூமியின் பாதையை கடக்கும் ஆஸ்டராய்டுகளில் ஒன்று.

இதுபோன்ற விண்கற்களை நாசா மற்றும் CNEOS போன்ற விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

இந்த விண்கள் பூமியுடன் மோதினால் அணுகுண்டு வெடிப்புகளுக்கு சமமான அழிவு ஏற்படும். அதிக அளவிலான தீப்பிழம்புகள் உருவாகும். பல ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் விளைவுகள் காணப்படும்.

கடந்த 1908 ஆம் ஆண்டு சைபீரியாவில் நடந்த “Tunguska” வெடிப்பு இதைவிட சிறிய விண்கல் காரணமாகவே ஏற்பட்டது, ஆனால் 2,000 சதுர கி.மீ காட்டை அழித்தது.

2014 TN17 விரைவில் பூமியை பாதுகாப்பாக கடந்து செல்லும். எனினும் இதுபோன்ற விண்கற்கள் எதிர்காலத்தில் பாதை மாற்றி ஆபத்து விளைவிக்கக் கூடும் என்பதால், அவற்றின் இயக்கங்களை தொடர்ந்து கண்காணிக்கிறோம்” என நாசா தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button