News
அறிமுகமானது புதிய செயலி: இலகுபடுத்தப்பட்ட மக்களின் செயற்பாடு

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய செயலியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு, இன்று (22) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் முறைப்பாடுகளை முறையான மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகள் மூலம் சமர்ப்பிப்பதை எளிதாக்கும் வகையில் EC EDR என்ற இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, பொதுமக்கள் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை அளிக்க வேண்டியிருந்தால், இந்த செயலியின் மூலம், அதனை சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, செயலி மூலம் முறைப்பாட்டை அளித்த நபர் அதன் முன்னேற்றம்குறித்து அறியலாம் எனவும், இந்த செயலியில், காணொளி மற்றும் புகைப்படத் தகவல்களை வழங்கும் வசதியும் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.