பரிமாறிக்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தங்கள்!

இந்தியா-இலங்கை கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான உத்தியோகபூர்வ அரசு விழா தற்போது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது.
இதன்போது, வலுசக்தி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுளளன.
அத்துடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் தலைமையில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணி இணையவழியாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாள் விஜயமாக நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தார்.
இது அவர் நாட்டிற்கு மேற்கொள்ளும் நான்காவது விஜயமாகும், இந்த விஜயத்தின் போது பல இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திட திட்டமிடப்பட்டிருந்தன.
இதேவேளை, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட குழுவினரும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.