வெளிநாடொன்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை

பப்புவா நியூ கினியா நாட்டில் இன்று (05) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மியன்மார் (Myanmar), தாய்லாந்து (Thailand) மற்றும் ஜப்பானை (Japan) தொடர்ந்து நேபாள (Nepal) நாட்டில் இன்று(04) நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரவு 7.52 மணிக்கு 20 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும்(india) உணரப்பட்டது. வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
முன்னதாக கடந்த வாரம் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் மியன்மாரில் 3 ஆயிரத்து 145 பேர் உயிரிழந்தனர். தாய்லாந்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.