Uncategorized
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது சுமார் 5.7 ரிக்டராக பதிவாகியுள்ளது.
வடக்கு சுமத்ராவில் பூமிக்கு அடியில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரிக்டர் அளவில் 5.7 என்ற அளவு மிதமான சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக கருதப்பட்டாலும், அடர்ந்த மக்கள் தொகை பகுதிகளில் இது சிறிய சேதங்களை ஏற்படுத்தியிருக்கலாம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.