News
வெளிநாடொன்றில் வேலைவாய்ப்பிற்காக அனுப்பப்படவுள்ள இலங்கையர்கள்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட இஸ்ரேலின் விவசாயத் தொழில்துறைக்கு இலங்கையர்களை உள்வாங்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இஸ்ரேலில் விவசாயத் தொழிற்துறையில் பணியாற்றக் கூடிய 95 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தொழிலுக்காக இஸ்ரேலுக்குச் செல்லும் 12 பேருக்கு நேற்றைய தினம் (10) விமான பயணச் சீட்டுகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நபர்கள் எதிர்வரும் 20ஆம் திகதி இஸ்ரேலுக்குச் செல்லவுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.