அதிவேக நெடுஞ்சாலைகளில் புதிய முறையில் பண பரிமாற்றம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வங்கி அட்டைகளைப் பயன்படுத்துவது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) அறிப்பொன்றை விடுத்துள்ளார்.
இதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகள் மே முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயத்தை ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டச் அண்ட் கோ முறை அல்லது இன்சர்ட் முறையைப் பயன்படுத்தி எட்டு வினாடிகளில் இது இந்நடவடிக்கையை நடைமுறைப்படத்தலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முன்னோடித் திட்டம் கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை இடைமாற்றத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சாலை மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் பாஸ்கரன், முன்னோடித் திட்டத்தைத் தொடங்கி வைத்து கடவத்தையிலிருந்து தனது ஜீப்பில் வந்து, கொட்டாவ இன்டர்சேஞ்ச் மையத்தின் வெளியேறும் சாளரத்தில் அடையாளமாக அட்டை மூலம் பணம் செலுத்தியுள்ளார்.
இதன்படி, இன்று முதல், கொட்டாவ மற்றும் கடவத்தை இடையேயான பரிமாற்றங்களில் மட்டுமே அட்டை மூலம் பணம் செலுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இதற்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு பாதையைப் பயன்படுத்துமாறு அதிவேக நெடுஞ்சாலை செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் மேலாண்மை பிரிவு சாலை பயனர்களுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.