News
மியன்மாரில் மீண்டும் நில நடுக்கம்

மியன்மாரில் (Myanmar) மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கமானது இன்று (11) காலை 4.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலக்கடுத்தால் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மியன்மாரில் கடந்த 28 ஆம் திகதி 7.7 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
இந்த நில அதிர்வில் சிக்கி 3,145 பேர் உயிரிழந்துள்ளதுடன் 221 பேர் காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.