News
மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்.

நாட்டின் முக்கிய பயிர்களான தேயிலை, தேங்காய் மற்றும் ரப்பர் ஆகியவற்றின் உற்பத்தி இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் குறைந்துள்ளது.
வறட்சியான வானிலை காரணமாக பெப்ரவரி மாதத்தில் தேயிலை உற்பத்தி 15.6 மில்லியன் கிலோவாகக் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேபோல், ரப்பர் உற்பத்தியும் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பெப்ரவரியில் 5.03 மில்லியன் கிலோகிராமாக குறைந்துள்ளது.
அத்துடன், பெப்ரவரி மாதத்தில் தேங்காய் உற்பத்தி 178.01 மில்லியனாக குறைந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நாட்டின் தேங்காய் உற்பத்தி 260.5 மில்லியன்களாக இருந்ததாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.