புலம்பெயர்ந்தோருக்கு எதிராக பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை வேறொரு நாட்டுக்கு நாடுகடத்த ஒரு திட்டம் பிரித்தானிய அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்த, பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இதனடிப்படையில், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை வேறொரு நாட்டுக்கு நாடுகடத்த ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் இந்த திட்டத்துக்கு ஐ.நா அமைப்பும் ஒப்புதலளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானிய உள்துறைச் செயலாளர், கடந்த மாதம், ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஆணையரை சந்தித்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
நாடு கடத்தப்படும் புலம்பெயர்ந்தோரின் நலன் தொடர்பில் ஐ.நா அமைப்பு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது என்றாலும், பிரித்தானியாவைப் பொருத்தவரை, பிரித்தானியாவுக்குள் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்ற நோக்கில் வரும் புலம்பெயர்ந்தோருக்கு இத்தகைய நாடுகடத்தல் நடவடிக்கைகள் தயக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால், இத்திட்டம், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டுவரும் பிரித்தானியாவுக்கு கிடைத்துள்ள ஒரு வெற்றியாகவே கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.