போர்ட் சிட்டி தனித்துவ மையமாக உயர்ந்துள்ளதாக பெருமிதம்!

போர்ட் சிட்டி என்ற கொழும்பு துறைமுக நகரம், தெற்காசியாவின் நிதி தொழில்நுட்ப தலைநகராக உயரும் வகையில் தனித்துவமாக்கப்பட்டுள்ளதாக, இலங்கை நிதி தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நகரம், வலுவான தலைமைத்துவம், உலகளாவிய ஒத்துழைப்புகள் மற்றும் முதலீட்டாளர் நட்பு கட்டமைப்புகளால் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின்போது, நிறுவனத் தலைவர் ராஜ்குமார் கனகசிங்கம், தெற்காசியாவில் முன்னணி நிதி தொழில்நுட்ப மையமாக கொழும்பு துறைமுக நகரத்தை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் ஒரு முக்கிய அறிக்கையை வழங்கினார்.
இந்த அறிக்கையின்படி, முன்மொழியப்பட்ட கொழும்பு சர்வதேச நிதி மையம், நிதி தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா போன்ற போட்டியாளர்களை விட கொழும்பு துறைமுக நகரத்தின் தனித்துவமான ஈர்ப்பை இந்த அறிக்கை கோடிட்டு காட்டியுள்ளது.
அத்துடன், துபாயில் செயல்படும் இந்திய நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், கொழும்பு துறைமுக நகரத்தை ஒரு நிரப்பு தளமாகக் பயன்படுத்தலாம் என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.